"தேர்தலை ஒட்டி ஏப்.4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் செயல்படாது" -டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு
தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, வாக்குப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்பே மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் குடோன்களில் இருந்து கடைகளுக்கு சில தினங்களாக மதுபானங்களை கொண்டு செல்லவில்லை. மூன்று நாட்கள் கடைகள் இருக்காது என்பதால், மதுபானங்களை வாங்க கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Comments